சனி, 27 அக்டோபர், 2012

முஸ்லிம் பாடசாலையில் புகுந்த 10 பேருக்கு "வலை'


ஓசூர்: ஓசூர் அருகே கொத்தூர் முஸ்லிம் சிறுவர் பாடசாலையில் அத்துமீறி புகுந்து தாக்கிய வழக்கில், பஜ்ரங்தள் அமைப்பு மாவட்ட தலைவர் உள்ளிட்ட பத்து பேரை போலீஸார் தேடுகின்றனர். ஓசூர் அடுத்த கொத்தூர் ரிங் ரோட்டையொட்டி முஸ்லிம் சிறுவர்கள் படிக்கும் ஜமீயா மசூதிக்கு சொந்தமான அரேபியா மதரஸா பாடசாலை உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த பாடசாலைக்கு வந்த சிலர், பக்ரீத் பண்டிகைக்கு இறைச்சி வெட்டுவதற்காக மாடுகளை கட்டி வைத்துள்ளீர்களா? என கேட்டனர். பாடசாலை நிர்வாகிகள் இல்லை என தெரிவித்தனர். அதற்கு அந்த நபர்கள், "மாட்டை வெட்டினால் உங்களை வெட்டுவோம், ' என மிரட்டினர். இதை அங்குள்ளவர்கள் தட்டி கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அந்த நபர்கள், அவர்களை சரமாரியாக தாக்கி சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி., கோபி மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். புகாரின்பேரில், பஜ்ரங்தள் அமைப்பு மாவட்ட தலைவர் தேவராஜ், பெரியார் நகர் சக்தி, கஜா உள்ளிட்ட பத்து பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓசூர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக