புதன், 17 அக்டோபர், 2012

மருத்துவக் கழிவுகள் : மத்திய அரசு ஆய்வுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிஸார்!


புது தில்லி : இந்தியாவில் அன்றாடம் உருவாகும் மருத்துவக் கழிவுகளை (Bio-medical Waste) கையாள மத்திய அரசு மருத்துவக் கழிவுகள் (நிர்வாகம், கையாளுதல்) விதிகள் – 2011 (Bio-medical Waste (Management and Handling) Rules, 2011) என்ற பெயரில் சட்டம் வகுத்துள்ளது. இதன் வரைவுச் சட்டம் ஆகஸ்ட் 24, 2011 அன்று வெளியிடப்பட்டது. அது குறித்து பொதுமக்களின் கருத்தும் கோரப்பட்டு, தற்போது தொகுக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்ய அக்டோபர் 5 அன்று 11 நபர் வல்லுனர் குழு ஒன்று மத்திய சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சார்ந்த, சென்னையில் பணி புரியும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் டி. முஹம்மது கிஸார் இர்ஷாத் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவின் முதல் கூட்டம் நவம்பர் மாதம் 7, 8 தேதிகளில் புது தில்லியில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக