செவ்வாய், 23 அக்டோபர், 2012

மும்பை தாக்குதல் அஜ்மல் கசாப் கருணை மனு உள்துறை அமைச்சகம் நிராகரித்தது


மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, அஜ்மல் கசாப், தனக்கு கருணை காட்டக்கோரி அனுப்பிய கருணை மனுவை மத்திய நிராகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008 நவம்பர், 26ல், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த படுபயங்கர தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான். அவன் மீதான விசாரணை, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட, சிறப்பு கோர்ட்டில், நடைபெற்றது; அதில், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின், இந்தத் தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். சுப்ரீம் கோர்ட், ஆகஸ்ட், 29ல், அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில், தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பினான். இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் இந்த மனு, முதல்வர் அலுவலகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது கசாப்பின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், ஜனாதிபதியும் கசாப்பின் மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக