செவ்வாய், 9 அக்டோபர், 2012

மாலத்தீவின் முன்னாள் அதிபர் நஷீத் கைது


மாலி: மாலத்தீவின் முன்னாள் அதிபர் முஹம்மத் நஷீத் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக இந்தக் கைது நடைபெற்றுள்ளது. அதிகாரத்தில் இருக்கும்பொழுது ஒரு நீதிபதியை சட்டவிரோதமாகக் கைது செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.
இராணுவப் புரட்சி ஏற்பட்டதன் விளைவாக கடந்த பிப்ரவரி மாதம் நஷீத் தன் அதிபர் பதவியை இராஜினாமா செய்தார். ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இவர்தான். தெற்கு மாலியிலுள்ள வீட்டில் வைத்து நஷீத் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக