திங்கள், 22 அக்டோபர், 2012

குவைத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் முறியடிப்பு :


குவைத் நாட்டில் தேர்தல் விதிமுறைகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தலைமை செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டகாரர்கள் பேரணி நடத்த முற்பட்டனர். நகரத்தின் பல பகுதிகளில் இருந்து போராட்டகாரர்கள் திரண்டனர். அவர்கள் குவைத் பிரதமர் வீடு அமைந்துள்ள செய்ப் அரண்மணியை நோக்கி செல்ல முயன்ற பொது போலீசார் கண்ணீர் புகை மற்றும் குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் பர பரப்பு ஏற்பட்டது.தேர்தல் விதிமுறைகளை மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று போராட்டகாரர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பேரணி குவைத் வரலாற்றிலேயே பெரிய பேரணி என்று போராட்டகாரர்கள் தெரிவித்தனர். அதே நேரம் " இந்த மாதரியான எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் குவைத் அரசு அனுமதிக்காது " என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2006 தேர்தல் விதிப்படி ஒருவருக்கு நான்கு ஓட்டு என்று இருந்த விதியை மாற்றி ஒருவருக்கு ஒரு ஓட்டு என்று ஷெய்க் சாபாஹ் அல் அஹ்மத் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய தேசியவாத அமைப்பு தான் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசியல் குழப்பத்தால் அந்நாட்டு ஸ்டாக் எக்ஸ்சஞ்சில் பெரிய பின்னனைவை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக