ஞாயிறு, 14 அக்டோபர், 2012

லிபியா பிரதமர் மாற்றம் : அலீ ஸிடான் புதிய பிரதமராகத் தேர்வு!


லிபியா : லிபியாவில் நடைபெற்ற புரட்சிக்கு பிறகு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, முஸ்தபா அபுஷாகர் என்பவர் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். . இருப்பினும் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவரால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சி, ஆட்சிக்கு வந்த 25 நாட்களிலேயே அவரை பிரதமர் பதவியிலிருந்து விலக்கியது. இந்நிலையில் 200 உறுப்பினர்களை கொண்ட அக்கட்சி அலி சிடான் என்பவரை அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமர் பதவிக்கான தேர்தலில் சிடான் 93 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். சிடான் முதலில் முஸ்தபாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக