வியாழன், 11 அக்டோபர், 2012

சுன்னத் செய்வதற்கு ஜெர்மனியில் சட்டம் :


பெர்லின்:கொலோன் நகர நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து ஜெர்மனியில் தடைச் செய்யப்பட்டிருந்த கத்னாவுக்கு(சுன்னத்) நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்க ஜெர்மன் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடிவுச்செய்துள்ளன. இதன் அடிப்படையில் முஸ்லிம்களும், யூதர்களும் இது நாள் வரை நடத்தி வந்த சடங்குகளின் அடிப்படையில் கத்னாவை செய்துகொள்ளலாம். யூத சமூகத்தைச் சார்ந்த ரப்பானிகள் மற்றும் முஸ்லிம்களில் சவரக்காரர்கள் ஆகியோருக்கு கத்னா செய்வதற்கான உரிமம் வழங்கப்படும். அதேவேளையில் ஒரு அனஸ்தீஸியா நிபுணரின் மேற்பார்வையில், ஆண் குழந்தையை மயக்கத்தில் ஆழ்த்திய பிறகே கத்னா செய்யவேன்டும் என்பதுதான் நிபந்தனை. கத்னா செய்யும் போதும் செய்த பின்னரும் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி பெற்றோர்களுக்கு முழுமையாக அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளும் இந்த சட்டத்தில் வரையறுக்கப்படும். வேதனை இல்லாத கத்னா என்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் நான்கு மாதங்களாக இரு சமூகத்தினர் தொடர்ந்து வந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக