ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பாத்திஹா சூரா தெரியாது என்றால் ஹஜ் இல்லை - நைஜெரியா அறிவிப்பு.


நைஜெரியாவில் நூற்றுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகள் ஹஜ் செல்வதற்கு தடை செய்யப்பட்டனர். அதிர்ச்சியடைய வேண்டாம் , இதற்கான காரணம் தான் ஒவ்வொரு முஸ்லிமும் வெட்கப்பட வேண்டிய விஷயம் அது என்ன வென்றால் இந்த ஹஜ் பயணிகள் ஒருவருக்கும் திருக்குரானின் முதல் அத்தியாயமான அல் பாத்திஹா சூரா மனப்பாடமாக ஓத தெரியாது. திருக்குரானின் தாய் என்று அழைக்கப்படும் அல் பாத்திஹா சூரா ஓத தெரியவில்லை என்றால் இவர்களுக்கு ஹஜ்ஜில் என்ன வேலை இருக்கிறது என்று நைஜெரியா அரசு இவர்களுக்கு ஹஜ் செல்ல அனுமதி மறுத்துவிட்டது. இது குறித்து ஹஜ் பயணிகள் நல சங்க செயலாளர் இதிரிஸ் பாபா கூறியதாவது " ஒரு தடவை பாதிஹா தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அவர்களுடைய ஹஜ் பயிற்சி நிறுத்தப்படும். புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் கண்டிப்பாக தொழுகைமுறையை அறிந்திருக்க வேண்டும்". பாத்திஹா சூரா தெரியாது என்றால் ஹஜ் இல்லை என்பது கொள்கையாக இந்த அரசு அறிவித்திருப்பது பலராலும் விமர்சனமும் செய்யப்படுகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக