புதன், 31 அக்டோபர், 2012

அதிபர் தேர்தல் செலவு 2.6 பில்லியன் டாலர்


வாஷிங்டன் : வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க அதிபர் தேர்தல் பணிக்காக மட்டும் 2.6 பில்லியன் டாலர் பணம் செலவிடப்பட்டுள்ளது. 2012ல் தேர்தலுக்காக அதிகபட்சமாக 6 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்தலுக்காக செலவிடப்பட்ட 700 மில்லியன் டாலர்களே அதிகபட்ச தொகையாக இருந்து வந்தது. இந்த அதிகபட்ச தொகை வரலாற்று சாதனை மட்டுமல்ல, தேர்தலுக்கு தேர்தல் அதற்காக செலவிடப்படும் தொகையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை செப்டம்பர் இறுதி வாரத்தில் 19 மில்லியன் டாலர்களாகவும், அக்டோபர் முதல் வாரத்தில் 33 மில்லியன் டாலர்களாகவும், அக்டோபர் 21ல் இத்தொகை 70 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலுக்காக நிறுவனங்கள் மற்றும் தனிமனித அமைப்புக்கள், செனட் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அளித்து வரும் தொகையும் அதிகரித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக