செவ்வாய், 16 அக்டோபர், 2012

துபாயில் தொழிலாள‌ர்களுக்கான பாட்டுக்குப் பாட்டு நிக‌ழ்ச்சி


துபாய்: துபாய் தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் ஆத‌ர‌வில் அமீர‌க‌மெங்குமுள்ள‌ தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ பாட்டுக்குப் பாட்டு நிக‌ழ்ச்சியின் இறுதிப் போட்டி சோனாப்பூர் முனிசிபாலிட்டி அர‌ங்கில் ந‌டைபெற்ற‌து. ஆறாம் ஆண்டாக‌ ந‌டைபெற்று வ‌ரும் இப்போட்டியில் நான்காம் ஆண்டாக‌ தொட‌ர்ந்து ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌ம் சாம்பிய‌ன் ப‌ட்ட‌ம் வென்றுள்ள‌து. இந்நிறுவ‌ன‌த்தின் ச‌ந்திர‌மா ஷா ம‌ற்றும் மொய்ன் கான் ஆகியோர் இவ்வாண்டுக்கான் சாம்பிய‌ன் ப‌ட்ட‌ம் வென்ற‌ன‌ர்.
சாம்பிய‌ன் ப‌ட்ட‌ம் வென்ற‌வ‌ர்க‌ளுக்கு திர்ஹ‌ம் 5000க்கான‌ ப‌ரிசுக் கூப்ப‌ன், 3 டி டிவி, ஏர் அரேபியா விமான‌ ப‌ய‌ண‌ச் சீட்டு, கிரிஸ்ட‌ல் சீல்டு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌ரிசுக்கூப்ப‌ன்களும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. கேம்ப் கா சாம்ப் எனும் த‌லைப்பில் ந‌டைபெறும் இப்போட்டிக்கு, வெஸ்ட‌ர்ன் யூனிய‌ன் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிறுவ‌ன‌ங்க‌ள் ஆதரவு வ‌ழ‌ங்கி வ‌ருகின்ற‌ன‌. ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌ தொழிலாள‌ர்க‌ளை ந‌ல‌த்துறை மேலாள‌ர் முஹைதீன் பாட்சா த‌லைமையில் ந‌ல‌த்துறை அலுவ‌ல‌ர் அஹ‌ம‌து சுலைமான் ஒருங்கிணைப்பு ஏற்பாடுக‌ளை செய்திருந்தார்.வளைகுடா நாடுகள் இஸ்லாமிய அடிப்படையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தடம் புரள ஆரம்பித்து விட்டன என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. இந்த மாதிரியான இஸ்லாத்தில் ஹராமான விசயங்களுக்கு இங்கு எளிதாக அனுமதி கிடைப்பது தான் வேதனையான விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக