வியாழன், 25 அக்டோபர், 2012

பொதுத்தேர்தலில் போட்டி: முஷாரப் முடிவு


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 1999-2008-ம் ஆண்டு வரை அதிபராகவும், ராணுவ சர்வாதிகாரியாகவும் இருந்தவர் பர்வேஷ் முஷாரப் (69). தற்போது நாட்டை விட்டு வெளியேறி லண்டன், துபாய் ஆகிய நகரங்களில் மாறி மாறி வசித்து வருகிறார். அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை துவக்கியுள்ள அவர், பாக்.கின் முன்னாள் பிரதமர் பெனசிர்பூட்டோ கொலை வழக்கில் இன்டர்போல் அமைப்பினால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாக்.கில் நடக்க உள்ள பொதுதேர்தலில், கைபர் பக்துன்ஹவா மாகாணத்தில், சிட்ரால் தொகுதில் போட்டியிடப்போவதாக, அறிவித்துள்ளார். இதனை அவரது கட்சியின் மூத்த நிர்வாகி சையீப் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக