ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நோபல் பரிசுக்கு போட்டியாக ஈரான் விருது அறிவிப்பு


மாஸ்கோ:நோபல் பரிசுக்கு இணையாக,ஈரான் நாடு,நபிகள் நாயகம்பெயரில்,புதிய விருதை அறிவித்து உள்ளது. சர்வ தேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர் களுக்கு, 1901ம் ஆண்டு முதல், "நோபல் பரிசு' வழங்கப்பட்டு வருகிறது.கடந்த, 2003ல், ஈரான் நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஷிரின் எபாடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் தற்போது, ஈரான் மீது, அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான புகாரினால், பொருளாதாரத் தடை விதித்துள்ளன. அதுமட்டுமல்லாது, இந்த ஆண்டு ஐரோப்பிய யூனியனுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு உள்ளது.நோபல் பரிசு ஒரே ஒரு முறை தான், ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுக்குப் போட்டியாக, ஈரான் நாடு, நபிகள் நாயகத்தின் பெயரில், புதிய விருதை உருவாக்கி உள்ளது. "முஸ்லிம் நாடுகளை சேர்ந்த, மூன்று தொழில்நுட்பத் துறைகளில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விருது வழங்கப்படும்' என, ஈரான் துணை அதிபர் நஸ்ரின் சோல்டாங்கா தெரிவித்து உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக