சனி, 27 அக்டோபர், 2012

தற்கொலை படை தாக்குதல் : ஆப்கன் மசூதியில் 40 பேர் பலி


காபூல்: ஆப்கானிஸ்தான் மசூதியில், தற்கொலை படையினர், தாக்குதல் நடத்தியதில், 40 பேர் பலியாயினர்; 70 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு, ஆட்சியை இழந்த தலிபான்கள், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் மூலம், அதிபரான ஹமீத் கர்சாய், தலிபான்களை அமைதி வழிக்கு திரும்பும் படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, பர்யாப் மாகாணம், மேமானா என்ற இடத்தில் உள்ள மசூதியில், நேற்று, வெள்ளி கிழமை சிறப்பு தொழுகை நடந்தது. இந்த மாகாணத்தின் காவல் துறை தலைவரும், சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ள வந்திருந்தார். இதையொட்டி மசூதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் உடையில் வந்த, தற்கொலை படை ஆசாமி, தன் உடலில் கட்டியிருந்த, வெடிகுண்டை வெடிக்க செய்ததில், 15 போலீசார் உள்பட, 40 பேர் உடல் சிதறி பலியாயினர். 70க்கும் அதிகமானோர், பலத்த காயம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக