வியாழன், 11 அக்டோபர், 2012

பி.ஜே. அவர்களுக்கு குணமடைய பிரார்த்தனை செய்வோம்


கோடிக்கணக்கான தமிழ் பேசும் நல்லுள்ளங்களில் பெரும் அன்பை பெற்றுள்ள தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் நிறுவனர் மவ்லவி பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர்.
யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

1 கருத்து:

  1. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இமாம் பி.ஜே . அவர்கள் பூரண உடல்நலத்துடன் திரும்பி வருவார். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய ஆய்வாளர். எத்தனையோ மார்க்க அறிஞர்கள் சொல்ல தயங்கிய, சொல்வதற்கு பயந்த மார்க்க விசயங்களைஎல்லாம் யாருக்கும் பயப்படாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து உலகுக்கு அறிவித்தவர். அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்தியத்தை யாராவது ஒருவர் மூலம் மேலோங்க செய்வான். அந்த சத்தியவாதிகளில் ஒருவர் இமாம். பி.ஜே.

    நடிகர்களின் பின்னாலும் , அரசியல்வாதிகளின் பின்னாலும் சென்று தங்கள் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ள முயற்சித்த கோடிக்கணக்கான இஸ்லாமிய இளைஞ்சர்களை மார்க்க சிந்தனையில் ஆர்வம் காட்ட வைத்தவர். இது புகழ்ச்சியோ , பெருமையோ அல்ல நிதர்சன உண்மைகளை சொல்வதில் தயக்கம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஒரு காலத்தில் பல வாலிபர்கள் தங்கள் பெயரை ரஜினி இப்ரஹீம் , கமல் முஸ்தபா, ரஜினி பாஷா அது போல் அரசியல்வாதிகளான கருணாநிதி, அண்ணா , எம்.ஜி.ஆர். பெயர்களையெல்லாம் தங்கள் பெயர்களுடன் இணைத்து போஸ்டர் அடிப்பதை விளம்பரம் செய்வதை பார்த்திருப்போம். இன்று அந்த நிலை இல்லை என்கிற அளவுக்கு மாற்றப் பட்டிருக்கிறது. இது பி.ஜே. யின் கவர்ச்சியான பேச்சின் மூலம் மாற்றப் பட்டது. இதை போலி சுன்னத் ஜமாஅத் இமாம்களே சில மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளனர். புதிய சினிமாவை பார்க்க அலைந்தவர்கள் எல்லாம் எங்கு பயான் ( மார்க்க உரை ) நிகழ்த்த படுகிறது என்று தேடி அலைந்ததை நாம் பார்த்தோம். சினிமா சி.டி. களின் விற்பனையை விட பி.ஜே.யின் மார்க்க உரை சி.டி. , டி.வி.டி. கள் இஸ்லாமிய மக்கள் மத்தியில் அதிகமாக விற்றது. தர்காவாதிகளை சேர்ந்த சி.டி. விற்பனையாளர்கள் கூட பி.ஜே. யின் சி.டி.கலை காப்பி போட்டு விற்றார்கள். ( இதிலே குறிப்பிட வேண்டிய விஷயம் மற்ற மார்க்க அறிஞர்கள் போல் பி.ஜே. தன்னுடைய உரைக்கு காபி ரைட்ஸ் கேட்கவில்லை. அதனை இலவசமாகவே வெளியிட சம்மதித்தார் .) பி.ஜே.யால் இந்த சமுதாயம் அடைந்த மாற்றங்கள் ஒரு தனி நபரால் ஏற்பட்டது என்று சொல்லவில்லை அவருடைய முயற்சிக்கு அல்லாஹ் அனைத்து உதவிகளும் செய்தான் , மக்களும் அதனை உத்வேகப்படுத்தினார்கள். மீண்டும் சொல்கிறோம் இது தனிநபர் புகழ்ச்சி அல்ல ஒருவரின் தவறை கண்டிக்கும் அதே நேரம் ஒருவரின் நற்காரியங்களை பாராட்டுவதும் தவறல்ல.

    பதிலளிநீக்கு