வியாழன், 18 அக்டோபர், 2012

நிரந்தர பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐதராபாத் நிஜாம்


லண்டன்:உலகின் நிரந்தர பணக்காரர்கள் பட்டியலில், ஐதராபாத்தை ஆண்ட, கடைசி நிஜாமின் பெயர் இடம் பெற்றுள்ளது.
உலகின் நிரந்தர பணக்காரர்கள் பட்டியலை, "செலிபிரிட்டி நெட் வொர்த்' என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது; இதில், 25 பேர், இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.இந்த இணையதளம் வெளியிட்டுள்ள பட்டியலில், 14 பேர் அமெரிக்கர்கள். தற்போது, இந்த பட்டியலில் உள்ளவர்களில், மூன்று பேர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.ஐதராபாத்தை ஆண்ட கடைசி நிஜாம், உஸ்மான் அலி கான். இவரது சொத்து மதிப்பு, 13.50 லட்சம் கோடி ரூபாய்; இவர் இந்தியாவின் நிரந்தர பணக்காரராக கருதப்படுகிறார். 1967ல், 80 வயதில் காலமானார். இவருக்கு, ஏராளமான ஆசை நாயகிகள் இருந்தாலும், மூன்று பேர் மட்டுமே மனைவியாக அங்கீகரிக்கப்பட்டனர். மத்திய ஆப்ரிக்க நாடான மாலியை, 14ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்சா மூசாவின் சொத்து மதிப்பு தான், உலகிலேயே அதிகம். இவரது சொத்து மதிப்பு, 23 லட்சம் கோடி ரூபாய். தன்னுடைய நாட்டில் இருந்த தங்கம் மற்றும் உப்பு வளங்களை சுரண்டி, சொத்து சேர்த்தார்.இந்த பட்டியலில், அமெரிக்க செல்வந்தரான ராக்பெல்லரின் பெயர், மூன்றாம் இடத்தில் உள்ளது. இவரது சொத்து மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய்.இப்பட்டியலில், இடம் பெற்றுள்ள குறைந்த சொத்து மதிப்புடைய பணக்காரர், வாரன் பப்பெட், 82 வயதான இவரின் சொத்து மதிப்பு, 3.7 லட்சம் கோடி ரூபாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக